‘விவசாயிகளின் மொத்த பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’:-மத்திய நிதி அமைச்சரிடம் விஷால் கோரிக்கை…

vishal
விவசாயிகளின் மொத்த பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்தனர்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கு எடுத்து வருகின்றனர். எனினும் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.

இந்த நிலையில் விவசாயிகள் இன்று 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்., விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். பின்னர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து விவசாயிகள் பிரச்சினை தீரவும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.விவசாயிகளின் பிரச்சனைக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Response