கடுகு படத்தின் விமர்சனம்!

kadugu
கதை, இயக்கம் – விஜய் மில்டன்
ராஜகுமாரன், பரத்

கடுகு சிறிதென்றாலும் அதன் வீரியம் பெரியது. ரொம்பக் கெட்டவங்க யாருன்னா ஒரு தப்பு நடக்கும்போது அதைத் தட்டிக் கேடகாத நல்லவங்க தான். இது தான் படம் சொலியிருக்கும் விஷயம்.

புலிப்பாண்டி ராஜகுமாரன் புலிவேஷம் போடுபவர். அநாதையான அவர் ஒரு பிரச்சனையில் போலீஸுடன் ஒரு ஊருக்கு உதவியாளராக பயணிக்கிறார். அந்த ஊற் மனிதர்களிடம் இவர் ஏற்படுத்தும் தாக்கம். அங்கு நடக்கும் தவறான சம்பவத்திற்கு இவர் செய்யும் எதிர்வினை தான் படம்.

ராஜகுமாரன் கிண்டல் செய்த அத்தனை பேரின் வாயையும் அடைத்து விட்டார். ஒரு புலி கலைஞனாக வாழ்ந்திருக்கிறார். குட்டி குட்டி முகபாவனைகளில் மனதை நிரப்பி விடுகிறார். ஒரு வயதான மனிதன் நேர்மையை அன்பை கொண்டு வாழும் மனிதனாக ராஜகுமாரன் வாழ்ந்திருக்கிறார்.

பரத் உண்மைக்கும் தப்புக்கும் நடுவில் சிக்கிக் கொள்ளும் மனிதனாக அதிகம் உழைப்பை கோரும் கதாப்பாத்திரம் மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

ராதிகா பிரஷிதா டீச்சர் கேரக்டரில் மனதை பிசையும் கேரக்டரில் நடித்திருக்கிறார். உணர்வுகளி அழகாய் வெளிப்படுத்தும் நாயகி. தமிழ் சினிமா பயன்படுத்திக்கொண்டால் வரம்.

ஒவ்வொரு சின்ன கேரக்டரும் அசத்தியிருக்கிறார்கள். திருடன் கேரக்டரில் வரும் அந்த புது நடிகர் கல்க்கியிருக்கிறார்.

விஜய் மில்டன் கோலிசோடாவுக்குப் பிறகு முழுப்பலத்துடன் வந்திருக்கிறார். வசனங்கள் அனைத்தும் மனதை தைக்கும் ரகம். ஒளிப்பதிவு கச்சிதம். ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் அழகான சிஷ்யன் சொல்லி மனதை கவர்கிறார்கள்.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது உறுத்தாத வாழ்வை வாழுங்கள் எனச் சொல்கிறது கடுகு.

Leave a Response