கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்த டாக்டர்!

childrans-logo
சென்னை முழக்கடையை அடுத்து உள்ள கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக பட்டாளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார்.

அவருக்கு கடந்த 17-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலால் பிறந்த இந்த குழந்தை எனக்கு வேண்டாம் என அந்த பெண் கூறி குழந்தையை டாக்டரிடம் ஒப்படைத்துச் சென்றார். வில்லிவாக்கம் ராஜமங்கலம் வேதவள்ளி தெருவை சேர்ந்தவர் விந்தியா (40). அரசு மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குழந்தை இல்லை. இவர் தனியார் டாக்டருக்கு தெரிந்தவர்.

இதனால் அந்த டாக்டர் ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு, அந்த பெண் கொடுத்த ஆண் குழந்தையை விந்தியாவிடம் கொடுத்து விட்டார். அவரும் அந்த குழந்தையை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே விந்தியா சிகிச்சைக்காக அந்த குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் தாய்- தந்தையை பற்றி கேட்டார்கள். அதற்கு விந்தியா அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதாக கூறினார். அதற்கு ஊழியர்கள் முறையாக அனுமதி பெற்று தத்து எடுத்தீர்களா என கேட்டனர். அதற்கு விந்தியா இல்லை என்று கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் விரைந்து சென்று விந்தியாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையை தத்து கொடுத்த டாக்டரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையில் ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு டாக்டர் குழந்தையை விந்தியாவிடம் விற்றது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த தனியார் டாக்டரும், விந்தியாவும் போலீசாரால் இன்று கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தையை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave a Response