தரம்சாலா டெஸ்ட்: ஆஸ்” 300 ரன்களுடன் ஆல்அவுட்!…

cricket
தரம்சாலா டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் விராட் கோலிக்குப் பதிலாக குல்தீப் யாதவும், இசாந்த் சர்மாவிற்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் சேர்க்கப்பட்டனர். குல்தீப் யாதவிற்கு இது அறிமுக போட்டியாகும்.

முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை வார்னர் சந்தித்தார். வார்னர் அடித்த முதல் பந்து 3-வது ஸ்லிப் திசையை நோக்கி பறந்தது. இதை கருண் நாயர் பிடிக்க தவறினார். இதனால் இந்தியா முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது.ஆனால் 2-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரென்ஷா க்ளீன் போல்டானார். அவர் 1 ரன் மட்டுமே எடுத்தார்.அதன்பின் வார்னர் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கேப்டன் ஸ்மித் அதிரடியாக விளையாடினார். இதனால் ரன்ரேட் 4-க்கு மேல் இருந்தது. இருவரும் மதிய உணவு இடைவேளைக்குள் அரைசதம் அடித்தனர்.

இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. வார்னர் 54 ரன்னுடனும், ஸ்மித் 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. வார்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மார்ஷ் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. வார்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மார்ஷ் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.7-வது விக்கெட்டுக்கு வடே உடன் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 37 ரன்கள் சேர்த்தது. கம்மின்ஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீ்ப் பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஓ’கீபே 8 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட் கீப்பர் வடே நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300-ஐ நெருங்கியது. ஆஸ்திரேலியா 298 ரன்கள் எடுத்திருக்கும்போது வடே 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு லயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். 88-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 300 ரன்னைத் தொட்டது. 89-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லயன் அவுட்டாக ஆஸ்திரேலியா சரியாக 300 ரன்னில் முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.

Leave a Response