தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘போகன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது. ரவிதேஜா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை பிரபுதேவா தயாரித்திருந்தார். ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பல்வேறு முன்னணி நாயகர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில், ஜெயம் ரவி வேடத்தில் ரவிதேஜா நடிப்பது உறுதியாகியுள்ளது. அரவிந்த்சாமி வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
‘போகன்’ படத்தை இயக்கிய லட்சுமணனே, தெலுங்கு ரீமேக்கையும் இயக்கவுள்ளார். தற்போது இதர நடிகர், நடிகைகள் ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளது படக்குழு.