“ஜியோ பிரைம் ரீசார்ஜ் “; செய்யாதவரின் நிலை என்னவாகும்?…

jio
ரிலைன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் இலவச சேவைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மார்ச் 31க்குள் ரூ.99 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.ஜியோ பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது ஒரு வருடத்திற்கு புத்தாண்டு சலுகைகள் நீட்டிக்கப்படும், எனினும் மாதம் ரூ.303 செலுத்தி அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் ஒவ்வொரு ரீசார்ஜ் செய்யும் போதும் கூடுதல் சலுகைகளை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். ஜியோ பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்ன ஆகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.தற்போது இருக்கும் வேலிடிட்டி நிறைவுற்ற பின் ஜியோ எண்ணில் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் சிறிது காலத்திற்கு மட்டும் கிடைக்கும், பின் அதுவும் துண்டிக்கப்பட்டு விடும். சுமார் 90 நாட்கள் வரை எவ்வித ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் உங்களது எண் துண்டிக்கப்பட்டு விடும்.

ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தி அதன் பின் எவ்வித ரீசார்ஜூம் செய்யவில்லை எனில் உங்களின் சேவைகள் நிறுத்தப்படும். உங்களுக்கு சில அழைப்புகளும், குறுந்தகவல்களும் வரும், எனினும் உங்களது நம்பர் சில காலத்திற்கு பின் துண்டிக்கப்பட்டு விடும்.
ஒருவேளை ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் பல்வேறு இதர திட்டங்களையும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். என்னும் அவை பிரைம் திட்டங்களை போன்ற சலுகைகளை வழங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மார்ச் 31, ஆம் தேதிக்கு பின் ஜியோ பிரைம் திட்டமே வேண்டாம் என்று ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் உங்களது ஜியோ எண் டிராய் விதிமுறைகளின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாகவே துண்டிக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Response