பொதுத்துறை வங்­கி­களின் வாராக்­க­டனை வசூலிக்க புதிய திட்டம்!-அருண் ஜெட்லி..

arun.
பொதுத்துறை வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­மாக உள்­ளது. அவற்­றில், 40 – 50 நிறு­வ­னங்­களின் வங்­கிக் கணக்­கு­களில் தான், பெரும் தொகை நிலு­வை­யில் உள்­ளது என்று மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

அத்­தொ­கையை வசூ­லித்­தாலே,வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னை­யின் பாதிப்பை, பெரு­ம­ளவு குறைத்து விட­லாம். அதன் மூலம், சொத்து மதிப்பு பாதிப்­பில் இருந்து, வங்­கி­கள் மீள முடி­யும்.
மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் இணைந்து, வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னைக்கு தீர்வு காண, தீவிர முயற்சி மேற்­கொண்­டுள்ளன.

கட­னா­ளி­க­ளி­டம் இருந்து, பணத்தை திரும்­பப் பெறு­வ­தற்­கான திட்­டத்தை உரு­வாக்­கும் பணி­யில், ரிசர்வ் வங்கி ஈடு­பட்­டுள்­ளது. இந்த திட்­டம் பற்றி, அடுத்த சில நாட்­களில் அறி­விப்பு வெளி­யாகும்.
கடந்த, 2016 மார்ச் நில­வ­ரப்­படி, 5.02 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்த, பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன், டிசம்­ப­ரில், 6.06 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது என்று மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி கூறினார்…

Leave a Response