34 தாது மணல் கிடங்குகளுக்கு ‘சீல்’: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்!

manal
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில், வி.வி.மின ரல், பி.எம்.சி., ஐ.எம்.சி., ஐ.ஓ.ஜிஎஸ். ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலை கள், கிடங்குகள் உள்ளன. பஞ்சா யத்து ராஜ் சட்டப்படி, இந்நிறுவ னங்கள் உரிய உரிமம் பெற்று நடத்தப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து திருநெல் வேலி ஆட்சியர் மு.கருணாகரன் விசாரணை நடத்தினார்.

இதில், 4 தாது மணல் நிறுவனங் களின் கிடங்குகளில் விதிகளை மீறி தாது மணல் இருப்பு வைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு உள் ளிட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய 7 குழு வினர் ராதாபுரம் தாலுகாவில் கரைச்சுத்துபுதூர், இருக்கன் துறை, திருவம்பலாபுரம், கரைச் சுத்துஉவரி, லெவஞ்சிபுரம், குட்டம், விஜயாபதி ஆகிய 7 இடங்களில் உள்ள 15 தாது மணல் கிடங்கு களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு.கருணாகரன் கூறியதாவது: தமிழக கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்க, கடந்த 8.8.2013 அன்று தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த வி.வி.மினரல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள், உரிமம் இல்லாமல் செயல்படுவது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய கிடங்குகளில் தாது மணல் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. ராதாபுரம் தாலுகாவில் வி.வி.மினரல் உள்ளிட்ட நிறுவனங்களின் தாது மணல் இருப்பு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகளை ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்டது. 15 கிடங்குகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இவற்றுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடை விதிக்கப்பட்டபோதும், ராதாபுரம் வட்டத்தில் விதிகளை மீறி தாது மணல் ஆலைகள் செயல் பட்டு வந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன், தாது மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில், தாது மணல் நிறுவனங்களை இயக்க, பஞ்சாயத்துராஜ் சட்டப்படி உரிமம் பெறவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்தினேன். அப்போது, ஓர் ஆலைக்கு மட்டுமே உரிமம் பெறப் பட்டிருந்தது. உரிமம் பெறாத ஆலை களில் இயந்திரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி. மினரல், பிஎம்சி மற்றும் ஐஎம்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டபோது, கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது மணல் 3,13,981 டன் இருப்பு வைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. விதிகளை மீறி தாது மணலை இருப்பு வைத்திருந்த 19 கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Response