நியூயார்க்கில் நடக்கயிருக்கும் இந்திய திரைப்பட விழாவில் 3 தமிழ்படங்கள் திரையிடப்படவுள்ளது!

new-york
நியூயார்க்கில் நடக்கயிருக்கும் இந்திய திரைப்பட விழாவில் 3 தமிழ்படங்கள் திரையிடப்படுகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. அதன் படி, இந்தாண்டுக்கான 17வது திரைப்பட விழா வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை நடக்கயிருக்கிறது. இதில், இந்தியாவில் இருந்து பல்வேறு படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வந்த ஒரு கிடாயின் கருணை மனு, கதிர் நடித்துள்ள சிகை, லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இது பற்றி சுரேஷ் சங்கையா கூறுகையில், மே மாதம் 6ம் தேதி தமிழ் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இன்னும் சில பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது என்றார்.

இது தொடர்பாக வியூஃபைண்டர் திரைப்பட நிர்வாக இயக்குனர் திலானி ராபிந்திரன் கூற்கையில், எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. வியூஃபைண்டர் திரைப்படத்தின் ஆலோசனை சார்பில் 3 தமிழ் திரைப்படங்கள் நியூயார்க்கில் திரையிடப்பட இருக்கின்றன. தென்னிந்திய திரைப்படங்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் உதவி செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Response