மார்ச் 24- ல் ரகுமான் நடித்து வெளியாகும் “ஒரு முகத்திரை”

oru
தற்போது இணையதளம் மூலம் உபயோகிக்கும் முகநூல் பக்கத்தால் ஏற்ப்படும் விபரீதங்களை கலமாக கொண்ட உருவாகிய படம் தான் “ஒரு முகத்திரை” இப்படத்தில் நடிகர் ரகுமான், சுரேஷ், அதிதீ, தேவிகா, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாப்பதிரமாக நடித்துள்ளனர். செந்திநாதன் இப்படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார்.

கலை – வினோத் ரவீந்திரன், நடனம் – பாபி, அருண் குமார், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், பி.ஆர்.ஓ. – நிகில், ஒளிப்பதிவு – ஷரவண பாண்டியன், இசை – பிரேம்குமார் சிவபெருமான், பாடல்கள் – மதன் கார்க்கி, அண்ணாமலை, பிரியன், ஜிபீ, தயாரிப்பு நிர்வாகம் – கன்னூர் நிர்மல், தயாரிப்பு – ஆர்.செல்வம்,

“ஒரு முகத்திரை’ படத்தில் பேஸ்புக்குதான் கதாநாயகன். வில்லனும் அதே பேஸ்புக்குதான். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐ.டி. துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. ஒரு சைக்காலஜிக்கல் டாக்டரே சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறேன்..” என்றார் இயக்குநர் செந்தில்நாதன்.

Leave a Response