நடிகை ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடத்தில் மிரட்ட வரும் “பேரழகி ஐ.எஸ்.ஓ”..!

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’

‘.’நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமானவர் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத் அடுத்து இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் தான் பேரழகி ஐ.எஸ்.ஓ.

படம் குறித்து பேரழகி விஜயன் கூறியதாவது:

இது ஒரு அறிவியல் புனைவு படம். சீரியசாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

Leave a Response