ஓட்டுப்போட்டது யாருக்கு என்று தெரிந்து கொள்ளும் புதிய வசதி: ‘தேர்தல் கமிஷன்’

election
தேர்தலில் நாம் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கயிருக்கிறது. இதனையொட்டி, ஒவ்வொரு தேர்தலின் போது தேர்தல் ஆணையம் ஏதாவது ஒரு புதிய யுக்தியை கையாண்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும், யாருக்கும் ஓட்டுப்போட்டோம் எனும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது யாருக்கு ஓட்டுப்போட்டோம் எனும் வசதியை ஏற்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதன்படி சென்னை நாடாளுமன்ற தொகுதியிலும், 2016 சட்டசபை தேர்தலின் போது அண்ணா நகர் தொகுதியிலும், சோதனை செய்யும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய வசதியில், நாம் ஓட்டுப்போடும் போது, வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தும் போது அதனுடன் பொருத்தப்பட்ட கருவியில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு துண்டு சீட்டு வெளியே வரும். அதில் நாம் யாருக்கு ஓட்டுப்போட்டோமோ அவரது கட்சி சின்னம் அதில் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் நமது வாக்குப்பதிவை உறுதி செய்துகொள்ளலாம். ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2.62 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அதிக வாக்காளர்கள் இருப்பதால், 256 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது…

Leave a Response