சீமைக் கருவேல மரங்களின் தீமை: மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

awarness-rally
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து கல்லூரி
மாணவர்கள், விழிப்புணர்வு பேரணி நடத்தினர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சீமை கருவேல மரங்களால் ஏற்படகூடிய தீமைகள் குறித்து வாணியம்பாடி நகராட்சியும் இஸ்லாமியாக் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியும் இஸ்லாமிய தனியார் கல்லூரியும் இணைந்து சீமைகருவேல மரங்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சீமை கருவேல மரங்களின் தீமைகள் மற்றும் அவற்றை அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த அச்சிடப்பட்ட பதாகைகளையும் கைகளில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்றனர். கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி இறுதியில் பேருந்து நிலையத்தில் சென்று முடிந்தது.

Leave a Response