
பாண்டியராஜ் மைக் பிடிக்கிறார் என்றால் ஏதாவது வில்லங்க நியூஸ் ஒன்று கண்டிப்பாக இருக்கும். மேடை என்றெல்லாம் பார்க்காமல் உண்மைகள் பலவற்றை பேசி விடுவார்.
நேற்று நடந்த கடுகு இசை வெளியீட்டு விழாவில் அப்படித்தான் ஓர் உண்மையை போட்டு உடைத்தார். “கடுகு ” ராஜ குமாரன் ஹிரோவாக நடித்திருக்கும் படம். விஜய் மிலடன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வாங்கி வெளியிடுகிறார். படம் வெளியாவதற்கு முன்னமே நல்ல அபிப்ராயத்தை இந்தப் படம் அனைவர் மத்தியிலும் உருவாக்கியுள்ளது.

என்னுடைய கோலிசோடா படம் உருவானதற்கு முக்கிய காரணம் பாண்டியராஜ் தான் இந்தப்படமும் உருவாக அவர் பெரிய காரணமாய் இருந்தார் என இயக்குநர் விஜய் மில்டன் கூறினார். அதன் பின் மைக் பிடித்த பாண்டியரஜ் சினிமாவில் யாரும் விசுவாசம் காட்ட மாட்டார்கள். நான் நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஆனால் எல்லோரும் என்னை முதுகில் குத்தியுள்ளார்கள். நான் மூணு எடிட்டர்களை அரிமுகப்படுத்தினேன் அனைவரும் முதுகில் குகுத்தினார்கள் இப்போதும் அடுத்த படத்தில் வேறொரு எடிட்டரை அறிமுகப்படுத்துகிறேன். விஜய் மில்டனுக்கு நான் பெரிய அளவில் எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் அவர் விசுவாச்த்துடன் இருக்கிறார். அவரது படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று பேசினார்.
கடுகு படதில் பரத் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.



