தன் மகனை வைத்து இயாக்கும் தம்பி ராமைய…

thambi raamaiyya
இயக்குனரும், நடிகருமான தம்பி ராமைய்யா, தனது மகன் உமாபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தன் மகன் விஜய்யின் வளர்ச்சிக்காக தொடர்ந்து 3 படங்களை இயக்கினார். அதேபோல் இயக்குனர் பி.வாசுவும், தன் சக்திக்காக முதல் ஒரு படத்தை இயக்கினார். அடுத்ததாக தன் மகன் தனுஷுக்காக, கஸ்தூரிராஜா ‘துள்ளுவதே இளமை’ என்ற படத்தை இயக்கினார். இப்படி இயக்குனர்கள் தங்களின் வாரிசுகளை திரையுலகில் அறிமுகப்படுத்தினர். இந்த வரிசையில் தம்பி ராமைய்யாவும் தனது மகன் உமாபதியை வைத்து படம் இயக்குவதாக இருந்தார்.

ஆனால் தம்பி ராமையா, பல படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் மகனை அறிமுகம் செய்யும் பொறுப்பை இன்ப சேகரன் என்ற புதுமுக இயக்குனரிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் இன்ப சேகரன் இயக்கத்தில் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தில் அவர் நடித்து வந்தபோதே, ‘தண்ணி வண்டி’ என்ற படத்திலும் நடித்து வந்தார். அதையடுத்து ‘தேவதாஸ் 2016’ என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் இப்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்தப் படத்தை மார்ச் 24ம் தேதி வெளியிடவுள்ளனர். மேலும், இந்த படங்களுக்குப்பிறகு மகன் உமாபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் தம்பி ராமைய்யா. ஏற்கனவே தம்பி ராமைய்யா ‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது மகன் உமாபதியை வைத்து ரொமான்டிக் காமெடி படம் ஒன்றை இயக்கவுள்ளார் தம்பி ராமைய்யா.

Leave a Response