தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்:கற்பழிக்கப்பட்டதுதான் காரணமா?

keral =2
கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஒரு மாத இடைவேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதில் தங்கை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி,மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த சிறுமியின் 9 வயதான தங்கையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தங்கையின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது,அந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.தற்கொலை செய்து கொண்டு இரண்டு சிறுமிகளும்,திரிச்சூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஒருவரின் மகள்களாவர்.இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அக்காவின் பிரேத பரிசோதனை அறிக்கையில்,அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான தகவல்கள் ஏதும் இல்லை.இருப்பினும் மற்றொரு முறை அந்த உடலை பரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.இந்த சிறுமிகளை அவர்களுக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Leave a Response