மீனவர்களின் பாம்பன் ரயில் மறியல் போராட்டம்.

maxresdefault (2)
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் மறியல் நடத்தப்படும் என்ற ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துளனர்.
இலங்கை கடற்படயினர் தமிழகத்தில் ராமேஸ்வரம் வாழ் மீனவர்களை அவ்வபோது பிடித்து செல்வது
படகுகளை பறிமுதல் செய்வது வழக்கமாக நடந்து வருவதும் பின்னர் மத்திய அரசு, மாநில அரசு தலையிட்டு மீனவர்களை மீட்டுவருவதும் கடந்த சிலவருடமாக நடந்து வருகிறது. எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ள நிலையில், கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்த கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரையும், அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று‌ புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த, 9 மீனவர்‌களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி வருகிற 11-ம் தேதியன்று பாம்பனில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல், தமிழக மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து சிறைப்பிடித்து செல்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response