ரூ.3.5 கோடி என்னாச்சு?: சாக்க்ஷி ஆவேசம்…

sakshi
ரூ. 3.5 கோடி பரிசு தருவோம் என சொன்னீங்களே என்னாச்சு என ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை அரியானா அரசை கேள்வி தொடுத்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக், 24. கடந்த ரியோ (2016) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இவரின் சாதனையை கவுரவிக்கும் முறையில், சொந்த மாநிலமான அரியானா அரசு ரூ. 3.5 கோடி தரப்படும் என அறிவித்தது இருந்தது.

தற்போது வரை இந்த பணம் தரப்படவில்லை.இது குறித்து சாக்க்ஷி தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என உறுதி அளித்தேன். இதை காப்பாற்றி விட்டேன். பதக்கத்திற்கு பரிசுத்தொகை தருவோம் என அரியானா அரசு வாக்குறுதி தந்தது. இதை நிறைவேற்றுமா,’ என, கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response