விரைவில் வரவிருக்கும் அதிவேக ரயில்கள்.

Bullet-Train
‘நம் நாட்டில், ஒரு மணி நேரத்தில், 600 கி.மீ., துாரத்தை கடக்கும், அதிவேக ரயில்களை இயக்குவதற்காக, ஆறு சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்,” என, ரயில்வே அமைச்சர், சுரேஷ்பிரபு தெரிவித்தார்.

சென்னையில், சி.ஐ.ஐ., என்ற, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த, தொழில் முன்னோடிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
தமிழகம், அனைத்துத் துறைகளிலும், சிறந்த மாநிலமாக விளங்குவதற்கான தகுதிகளை பெற்றுள்ளது. இங்குள்ள தொழில் அமைப்பினர், நாங்கள் தயாரித்து வரும், ‘2030 தொலைநோக்கு ரயில்வே பார்வை’ திட்டத்திற்கான பங்களிப்பை தர வேண்டும்.

மேலும், மாநிலத்திற்கு தேவையான, அனைத்து போக்குவரத்துகளையும் இணைக்கும் திட்டம் பற்றியும், எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள், ரயில்வே திட்டங்களை அறிவிப்பதுடன், இதுவரை இல்லாத வகையில், செயல்பாட்டு அறிக்கையை, ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறோம்.

ரயில்வே திட்டங்களுக்காக, 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் பணி துவங்கியுள்ளது. மேலும், மணிக்கு, 600 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடிய, அதிவேக ரயில்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, ஆறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அது, 10 ஆண்டுகளுக்குள் நிறைவேறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ., தமிழகத் தலைவர், ரமேஷ் கைமல், தமிழக தொழில் துறைச் செயலர், விக்ரம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Response