த்ரிஷாவை தன் ட்விட்டர் கணக்கை முழுக்கு போடவைத்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்..

images (3)
நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரான PETA என்ற பன்னாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இதன் காரணமாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவ்வப்போது த்ரிஷாவுக்கு எதிராக குரல்கள் எழுப்பி வந்தனர்.

சில நாட்களாக சமுகவலைத்தளங்களில் த்ரிஷாவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று த்ரிஷா காரைக்குடியில் ஒரு படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார். இந்த விஷயம் அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் த்ரிஷாவை படப்பிடிப்பு தளத்திலிருந்து விரட்டியடித்தனர். இதன் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, த்ரிஷா அங்கிருந்து உடனடியாக வெளியேறி சென்னை திரும்பினார்.

த்ரிஷாவின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட விஷயம்மறிந்த நடிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் தங்களுடைய சமுகவலைத்தளங்களில் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தனக்கு ஆதரவு கூடுகிறது என்ற காரணத்தினால், த்ரிஷா தன்னை படப்பிடிப்பு தளத்திலிருந்து துரத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திட்டி ஸ்டேட்டஸ் போட்டார். அந்த ஸ்டேட்டஸ்களை படித்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று எல்லை தாண்டி கேவளமாகவும் ஆபாசமாகவும் திட்டி பதிவிட்டுள்ளார்கள்.

இந்த சூழலில் இன்று இரவு த்ரிஷா, தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரானவர் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பதிவிட்ட சில நிமிடங்களில் த்ரிஷா மீண்டும் ஒரு பதிவை செய்தார். அதில் தனக்கு எதிரான யாரோ ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தை ஹாக் செய்து தவறான பதிவை செய்துள்ளனர் என பதிவிட்டிருந்தார். த்ரிஷாவின் முந்தைய பதிவை படித்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் த்ரிஷா மீது கோபமடைந்து கேவலமான மட்டும் ஆபாச பதிவுகளை செய்தனர். பதிவுகளை படித்த த்ரிஷா என்ன செய்வது என்று அறியாமல் தனது ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்டுவிட்டு வெளியேறிவிட்டார்.

உண்மையில் த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்த்தை அவருக்கு எதிரான வேறு எவரோ தான் த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என்ற பதிவை செய்தாரா அல்லது த்ரிஷாவே அந்த பதிவை செய்தாரா என அந்த பதிவ செய்தவருக்கு தான் தெரியும். இருப்பினும் ஒருவருடைய ட்விட்டர் கணக்கை எவராவது ஹேக் செய்தால், அந்த ட்விட்டர் கணக்கின் உரிமையாளர் புகார் செய்து சில மணி நேரம் கழித்து தான் அந்த ட்விட்டர் கணக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும். எனவே த்ரிஷா தன்னுடைய ட்விட்டர் கணக்கை வேறு ஒருவர் ஹாக் செயது தவறான பதிவு செய்துள்ளார் என்று சொல்லுவதில் நமக்கு நம்பிக்கை வருவது மிகவும் கடினம் தான்.

த்ரிஷா இனி தேவையற்ற விஷயங்களில் தலை நுழைப்பதை விட்டுவிட்டு சூதனமாக நடந்துகொள்வது அவருக்கு நல்லது.
Screenshot_20170114-202239
Screenshot_20170114-204744_1
Screenshot_20170114-202239

Leave a Response