தம்பிதுரையின் ஜல்லிக்கட்டுக்கான குரலும் ஒரு கண்துடைப்பே…

m-thambidurai_650_081314015253ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்துவரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகுதான் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும் என அறிவித்தது மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நாங்களும் ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறோம் என்று காண்பிப்பதற்காகவே ‘ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம், உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்துதான் அடுத்து நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கூறியுள்ளார்கள் என்று தெரிவிப்பதன் மூலம் ஒரும் பலனும் இல்லை.

மக்களவை துணை சபாநாயகர் தலைமையில் அதிமுக எம்.பிகள் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அணில் மாதவ் யாதவை சந்தித்தனர். அமைச்சரிடம் பேசியவர்கள் பொங்கலுக்கு  ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், இதற்கான அவசர சட்டத்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திதத் அமைச்சர் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்துவரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகுதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என கூறினார்.

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை பேசுகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் காளைகள் துன்புறுத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவர மத்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.” என கூறியுள்ளார்.

தம்பிதுரை போல பல அரசியல் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக நடக்கும் வழக்கை பற்றி அறிந்தும் மக்களை ஏமாற்றும் வகையில் கடிதம் எழுதுவது, குரல் எழுப்பிவது மட்டுமே செயகிறார்களே தவிர, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையோ அல்லது நீதித்துறையை கவனம் ஈர்க்கும் போராட்டமாக நடத்தவில்லை என்பது தான் உண்மை. போராளிகள் போராளிகளாகவே இருக்கிறார்கள், அரசியல்வாதிகள் சந்தர்ப்பங்களை வைத்து அரசியல் மட்டுமே நடத்துகிறார்கள்.

தற்போது தம்பிதுரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வலியுறுத்து வருவது கூட கண்துடைப்பே என்று தெரிகிறது.

Leave a Response