ஜல்லிகட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி மெரினாவில் பேரணி

15940736_1342760649095398_667650096117583846_nஜல்லிகட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பேரணி நடத்தினர். எந்த ஒரு அமைப்பையும்  சாராமல் சமூகவளைதலத்தின் மூலம் இணைந்து பேரணி நடத்தினர். இதில் 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

கலங்கரை விளக்கத்திலிருந்து, உழைப்பாளர் சிலை வரை நடைபெற்ற இந்த பேரணியில், தாரை, தப்பட்டை முழங்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் குரல் எழுப்பினர்.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காக்கும் வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இளைஞர்கள் கருத்தாக இருந்தது.

Leave a Response