பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பைரவா’ வரும் 12ம் தேதி வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ அதே நாளில் வெளியாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் பிப்ரவரிக்கு தள்ளிப்போனது. அதே நேரத்தில் அவர் நடித்துள்ள ‘அடங்காதே’ படத்தின் டீசர் ‘பைரவா’ படத்துடன் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உட்பட பலர் நடித்துள்ள ‘போகன்’ படத்தின் டிரைலரை ‘பைரவா’ படத்தின் இடைவேளையின் போது வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘போகன்’ படம் இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது.