கருணாநிதிக்கு எதிரான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு-சென்னை முதன்மை கோர்ட் உத்தரவு..!

திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைக்கப்படுதுவதாக சென்னை முதன்மை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடல்நல குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இப்போது தொண்டர்கள், மக்கள் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் சென்னை முதன்மை நீதிமன்றம் முடித்து வைத்தது.

2011-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 13 அவதூறு வழக்குகள் தொடர்ந்து. அவை அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

அவர் மீது நிலுவையில் இருக்கும் இன்னும் சில வழக்குகள் முடித்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response