நடிகர் மாதவனை இயக்கும் சற்குணம்

mv5bmta4mda1ndkxmtdeqtjeqwpwz15bbwu4mdu3nzyymjgx-_v1_uy317_cr150214317_al_நடிகர் மாதவன் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கவுள்ளார். இப்படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்க படங்களை தயாரித்த ‘Comman Man’ நிறுவனம் சார்பில் கணேஷ் மற்றும் ‘மஞ்சப்பை’, ‘டோரா’ படங்களை தயாரித்த ‘Sarkunam Cinemaz’ நந்தகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை மங்கோலியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் படமாக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படம் ஆக்சன் அட்வென்ச்சர்ஸ் பாணியில் குழ்ந்தைகள் மற்றும் குடும்பங்கள் பார்க்கும் குடும்பப் படமாக உருவாகிறது.

Leave a Response