டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் “சைலன்ஸ்” என்ற பெயரில் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஒரு ஆர்வத்தை உருவாக்கிய அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் நிஷப்தத்தின் டிரெய்லரை வெளியிட்டது. “சைலன்ஸ்” என்ற தலைப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகரின் உணர்ச்சிமிக்க பார்வையை வெளிப்படுத்தும் படத்தின் புதிய போஸ்டரையும் ஸ்ட்ரீமிங் சேவையானது வெளியிட்டது.
டிரெய்லரை இங்கே பாருங்கள்: https://www.youtube.com/watch?v=Gun6uT6buDc&feature=youtu.be
கதைச் சுருக்கம்:
செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள். துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தயார்செய்கின்றனர். கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுனிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக “நிஷப்தம்” இருக்கும்.
இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் “நிஷப்தம்” திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.