‘எமன்’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிடுக்கும் மியா ஜார்ஜ்

kyrsi188மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் மியா ஜார்ஜ் ‘அமர காவியம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யாவின் தம்பி சத்யா நடித்திருந்தார். ஜீவா சங்கர் இப்படத்தை இயக்கினார். இப்படம் பெரிதாக வெற்றியைக் கொடுக்கவில்லை. தொடர்ந்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்களும் அவருக்கு பெரிதாக பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை.

தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக எமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இப்படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என் எதிர்பார்ப்புடன் இருக்கிறார் மியா ஜார்ஜ். இந்தப் படத்தில் அழுத்தமாக கதாப்பாத்திரல் நடித்துள்ளார். மற்ற படங்கள் போல இந்தப் படம் என்னை ஏமாற்றிவிடாது, பெயர் சொல்லும் படமாக எமன் படம் இருக்கும் என கூறுகிறார் மியா ஜார்ஜ்.

Leave a Response