ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படம் செப்டம்பர்-5ஆம் தேதி ரிலீசாகிறது. தனது நண்பர்கள் வட்டாரத்திற்காக இந்தப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை சமீபத்தில் திரையிட்டு காட்டினார் ஆர்யா.
நட்பு வட்டாரம் என்றால் அதில் நயன்தாரா இல்லாமலா..? அவரும் ரசித்துப்பார்க்க ஆரம்பித்தாராம். ஒரு கட்டத்தில் இந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த நயன்தாராவின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது.. அரைமணி நேரம் அழுதிருக்கிறார்.. காரணம் இந்தப்படம் அவருடைய பழைய நினைவுளை கிளறிவிட்டதாம்.
படம் பார்த்தபின் வீட்டிற்கு சென்று அங்கேயும் கொஞ்ச நேரம் அழுதிருக்கிறாராம். அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து படத்தின் இயக்குனர் ஜீவாசங்கருக்கு போன் போட்டு “இந்தப்படத்தை பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை” என்று சொன்னாராம்.. இது ஒன்றே தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி என சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குனர் ஜீவாசங்கர்.