தரமணி படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட்டார்

newராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. இப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் மனதை மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்கள் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அறிவித்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் பாடல்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ளார். நா.முத்துக்குமாரின் வரிகளில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response