ஏழை மக்களுக்கு இரட்டை படுக்கையரை வீடுகள்: தெலுங்கானா முதல்வர் வழங்கினார்


hy22-housing_scheme

தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி வளர்ச்சி திட்டத்தின்கீழ் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவெல்லி மற்றும் நரசன்னாப்பேட் கிராமங்களை முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் தத்தெடுத்திருந்தார்.

அங்கு வாழும் 600 ஏழை மக்களுக்காக  இரட்டை படுக்கறை வசதியுடன் வீடுகளை கட்ட சிறப்பு திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் இன்று காலை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

இன்று அதிகாலை 600 புரோகிதர்களை வைத்து மேற்கண்ட அனைத்து வீடுகளுக்கும் கிரஹப்பிரவேசமும் அரசின் செலவில் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் வீடுகளோடு, அவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு கறவை எருமைகளையும், பத்து கோழிகளையும் வழங்கினார்.


 

Leave a Response