மக்களுக்கு எரிச்சலூட்டும் அமைச்சர்களின் கார் சைரன்கள்…!

sairan
நாடு முழுவதும் கார்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த தடை அமலுக்கு வந்த பிறகு, சில கார்களில் சிவப்பு விளக்கிற்கு பதில் சைரன் பொருத்தி கொண்டு அரசியல்வாதிகள் செல்வது பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.மே மாதம், 1ம் தேதி முதல், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தங்கள் கார்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்துவதை கை விட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இதையடுத்து பெரும்பான்மையானோர் தங்கள் கார்களில் இருந்து சிவப்பு விளக்கை அகற்றினர். ஆனால், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அரசியல்வாதிகள் சிவப்பு விளக்கிற்கு பதில் சைரன் பொருத்தி கொண்டு செல்கின்றனர். சாலைகளில் செல்லும் போது சைரன் ஏற்படுத்தும் சத்தம் பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், இதற்கு மாற்று வழி ஏதாவது இருக்கிறதா என்பதை பார்க்கும்படி, மாநில டி.ஜி.பி.,க்கு மாநில உள்துறை இணை அமைச்சர் தீபக் கேசர்கார் கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறுகையில்,’ அமைச்சர் போன்ற வி.ஐ.பி.,க்கள் சாலைகளில் செல்லும் போது, அவர்களின் கார்களுக்கும் மற்றவர்களின் கார்களுக்கும் பாதுகாப்பு காரணமாக வித்தியாசம் இருக்க வேண்டும்’ என்றார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் வி.ஐ.பி.,க்கள் தங்கள் கார்களில் சைரன் பொருத்தி, அவற்றை ஒலிக்க விட்டு செல்வதால், பொதுமக்கள் அச்சத்துடன் ஒதுங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Response