கிராமத்து பெண்ணாக நிவேதா பெத்துராஜ்

nivetha-pethuraj-images-at-oru-naal-koothu-audio-launch-01-1ஒரு நாள் கூத்து படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் மதுரை பெண்ணாக நடித்து வருகிறார் நிவேதா.

மதுரை மண்வாசனை கதையில் உருவாகிவரும் இப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் பார்த்திபன், சூரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

துபாயில் வளர்ந்த நிவேதாவின் சொந்த ஊர் மதுரைதான். இப்படத்தின் தன்னுடைய மார்டன் உடையில் இருந்து மாறி பாவாடை தாவணி அணிந்து பக்கா மதுரை பொண்ணாக நடித்து வருகிறார் நிவேதா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 15 தேதியில் முடிவடைகிறது.

Leave a Response