கருணாநிதி நலமுடன் இருப்பதாக புகைப்படம் வெளியீடு


whatsapp-image-2016-12-21-at-2-07-42-pmஉடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதால் தொண்டையில் துளை போட்டு சுவாச குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி தொலைக்காட்சி பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வெள்ளிக் கிழமை கருணாநிதி வீடு திரும்புவார் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

Leave a Response