வரும் 23-ம் தேதி வெளியாகிறது ‘கத்திச்சண்டை’


smt_4461சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் கத்திச்சண்டை. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் ’வைகைப்புயல்’ வடிவேலு மற்றும் சூரி நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,

விஷால் – வடிவேலு, சூரி மூவரது காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும். நிச்சயம் இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும். ஹிப்ஹாப் தமிழா எழுதி பாடிய “ நான் கொஞ்சம் கருப்புதான்” பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் இம்மாதம் 23 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது” என்று இயக்குனர் சுராஜ் கூறியுள்ளார்.


                

Leave a Response