பொங்கலுக்கு வெளியாகிறது அருண் விஜய்யின் ’குற்றம் 23’


04288a5c-0857-409c-bfe3-827fec6ebc09அருண் விஜய் நடிப்பில் மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும் படம் ‘குற்றம் 23’. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கின்றது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கிய இப்படத்தை ‘ரெதான் – தி  சினிமா  பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர் இந்தெர் குமார் கூறுகையில்,

”நல்ல நாளன்று திரைப்படத்தை வெளியிடுவது தான் எல்லா தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில், தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும்  எனக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடுகின்ற பொங்கல் திருநாள் அன்று குற்றம் 23 திரைப்படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது. பொங்கல் திருநாளை கொண்டாடும் ஒவ்வொரு ரசிகர்களின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும் சிறப்பம்சங்கள் எங்கள் குற்றம் 23 படத்தில் முழுமையாக நிறைந்திருக்கின்றது.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.


 

Leave a Response