அதர்வா கல்லூரி மாணவனாக நடிக்கும் “ஒத்தைக்கு ஒத்த”


othaiku-othaநடிகர் அதர்வா தற்போது ‘செம போதை ஆகாதே’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஒத்தைக்கு ஒத்த’ என பெயரிட்டுள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னீஷ் இப்படத்தை இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘விஷன் ஐ மீடியா’ சார்பில் தினேஷ் கார்த்திக் இப்படத்தை தயாரிக்கிறார்.

பழம்பெரும் நடிகர் தியாகராஜன்  மற்றும் அஞ்சாதே புகழ் நரேன் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இப்படம் கல்லூரிகளில் நடக்கும் காதல், சண்டை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. தற்போது  கதைக்கேற்ற கதாநாயகியை  தேர்வு செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.


 

Leave a Response