’பைரவா’வுடன் மோதும் ’புரூஸ்லீ’

vijayprakash6172013111814pm‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ’புரூஸ் லீ’. அறிமுக இயக்குனரான பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தனா நடித்துள்ளார்.

இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதவிர அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குற்றம் 23’, கிருஷ்ணாவின் ‘யாக்கை’, கலையரசனின் ‘அதே கண்கள்’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

விஜய் நடிதுள்ள பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில், மேலும் 5 படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Response