விஷாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்


keerthi-suresh-half-saree-in-rajini-murugan-1விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் பைரவா. இப்படம் வரும் பொங்களுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் ‘சண்டகோழி-2’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


 

Leave a Response