கருணாநிதியின் நலம் விசாரித்த அதிமுக.,வினர்


cz3y67yuuaakgciசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

இன்று மதியம் அ.தி.மு.க சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை, மீன் வளத்துறை அமைஅச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காவிரி மருத்துவமனைக்கு வந்து தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். எத்ர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினிடமும் நலம்  விசாரித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை,

அ.தி.மு.க சார்பிலும்,  சசிகலா சார்பிலும் கருணாநிதி  உடல்நலம் விசாரித்தோம். அவர் உடல் நலம் நன்றாக உள்ளார்.  கருணாநிதிஉடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Leave a Response