சென்னையை நெருங்கும் வர்தா புயல்


vardahதென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வார்தா புயல் சென்னை அருகே மதியத்திற்கு மேல் கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, வார்தா புயல் தற்போது சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

கரையைக் கடக்கும் போது  80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். மேலும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த பின்னரும் 12 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

Leave a Response