”பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது” நடிகர்சங்க அஞ்சலி கூட்டத்தில் ஜெ.விற்கு ரஜினி அஞ்சலி

img_2012

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த,

”1996ல் ஜெ. தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தேன். அவர் மனம் கஷ்டப்பட காரணமாக இருந்தேன்.

என் மகள் கல்யாணத்திற்கு தர்ம சங்கடத்துடன் ஜெ.விடம் அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்தது. வரமாட்டார் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் கழக திருமணம் இருந்தாலும், நான் நிச்சயம் வருவேன் என கூறி கலந்துகொண்டார். அப்படிப்பட்ட பொன் மனம் கொண்டவர் இப்பொழுது எங்களுடன் இல்லை” என்றார்.

மேலும், ”2 வயதில் தந்தை, 22 வயதில் தாயை இழந்தார். உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து அதிமுக’வை அரியணை ஏற்றியவரை இறைவன் அழைத்துவிட்டார். அவர் போல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் யாரும் இல்லை” என்றும்,

”புரட்சித் தலைவி வைரம்… ஆண் ஆதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு வைரமாக மின்னியுள்ளார். அவர் போனபிறகு கோடானகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றும் கூறினார்.

”பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது என்னுடைய கண்ணீர் அஞ்சலி” என்று குறிப்பிட்டு தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார்.


 

Leave a Response