ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘கபாலி’ விருந்து


rajiniaknthnசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை பண்டிகை போன்று அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர்.

நாளை 66-வது பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தாக  ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் நிராகரிக்கப்பட்ட காட்சிகளை (Deleted Scenes) வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.


 

Leave a Response