தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 20ம் தேதி பொதுக்குழு கூட்டம்


anna_l__வரும் 20-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செலயாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


 

Leave a Response