“வெண்ணிலா கபடி குழு – 2” படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது !


czso_pkuqaakuvq7 வருடங்களுக்கு முன் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் மூலம் விஷ்ணு விஷால் , சூரி , அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெண்ணிலா கபடி குழு-2 என தயாராகுகிறது.

இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது.  இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி , கிஷோர் , சூரி , ரவி மரியா , யோகி பாபு , அப்பு குட்டி , லக்ஷ்மி , பாவா லக்ஷ்மணன் , திருமா , விஜய் கணேஷ் , பன்னீர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பனி புரிந்தவர். மூலக் கதை சுசீந்திரன் எழுதியுள்ளார்.

இப்படத்திற்கு V. செல்வ கணேஷ் இசையமைக்கிறார். A. பூங்காவனம் மற்றும் N.ஆனந்த தயாரிக்கும் இப்படத்திற்கு E. கிடுஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு இன்று (10.12.16) முதல் ஆரம்பமாகியது. மாம்பாக்கம் கோவளஞ்ச்சேரி முனீஸ்வரர் கோவிலில் ஆரம்பமாகி தொடர்ந்து படபிடிப்பு நடைபெறுகிறது.


 

Leave a Response