விநியோகஸ்தர்களால் மிரட்டப்படுகிறேன்! என் உயிருக்கு ஆபத்து!! சொல்லுகிறார் தயாரிப்பாளர் பாரதி அய்யப்பன்:

img-20161116-wa0038

மறைந்த விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருமான ‘தேவர் பிக்ச்சர்ஸ்’ அய்யப்பன் அவர்களின் மகன் பாரதி அய்யப்பன் இன்று ஊடகவியாளர்களை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வெளியில் சந்தித்தார். அவர் கூறியதாவது, அவரை குறிப்பிட்ட 4 விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். யார் அவர்கள் என்ற கேள்விக்கு, சென்னையை சேர்ந்த ஒருவர், கோவையை சேர்ந்த ஒருவர், திருச்சியை சேர்ந்த ஒருவர் மற்றும் சேலத்தை சேர்ந்த ஒருவர் என தெரிவித்தார். பல முறை தயாரிப்பாளர்கள் சங்கத்தை முறையிட்டும் நிர்வாகம் உதவவில்லை என்று கூறினார். தன்னுடைய படங்கள் இந்த மிரட்டல்காரர்களால் வெளியிட முடியாமல் தவிப்பதாக தெரிவித்தார். ‘க க க போ’ படத்திற்கு வெளியீடு தேதி தான் அறிவித்து, அதை இவர்களுடைய நெருக்கடியால் வெளியிட முடியாமல் பல கோடி நஷ்டம் அடைந்ததாக பாரதி அய்யப்பன் ஊடகவியாளர்களிடம் தெரிவித்தார்.

மறைந்த அய்யப்பன் அவர்கள், சென்ற 7 வருடங்களுக்கு முன்பு வரை திரைப்பட விநியோகத்தில் கொடி கட்டி பறந்தார். இன்று அய்யப்பன் மகன், தனக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதைபோல், அய்யப்பனால் பல விநியோகஸ்தர்கள் முன்பு பாதிக்கப்பட்டனர் என்று புகார்கள் இருக்கிறது. அதன் காரணமாக அய்யப்பன் மீது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் பல வழக்குகள் தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு வருடங்களுக்கு முன்பு அய்யப்பன் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார்.

Leave a Response