தாமரை போட்ட வலையில் சிக்குவது நடிகையா? தொழிலதிபரா??


வாசகர்களுக்கு இது சினிமா செய்தியா அல்லது அரசியல் செய்தியா என்ற ஒரு குழப்பம் நேர வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. ரொம்ப கன்ப்யூஸ் ஆகாதீங்க வாசகர்களே. இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்களில் யார் ஆட்சி புரிந்தாலும், அவர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு சற்று ஒத்து போகியே ஆகவும். அப்பிடித்தான் இந்த 70 ஆண்டு காலமும் நம்முடைய மாநிலங்கள் இருந்து கொண்டு வருகிறது. அதில் சற்று கொஞ்சம் விதிவிலக்கு மேற்கு வங்காளமும், கேரளாவும்.

நாடாளுமன்ற தேர்தல் வர போகிறது என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி முதலில் எந்த மாநிலத்தில் அவர்களுக்கு பலம் குறைவு என்பதை தான் ஆய்வு செய்வர். பின்னர் அந்த மாநிலத்தில் பிரபலங்கள், பெரும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என முக்கியஸ்தர்களின் பட்டியலை அவர்கள் தயாரிப்பார்கள். பின்னர் அந்த பட்டியலை ஆய்வு செய்து அதில் அவர்களுடைய கட்சிக்கு ஆதரவான தொழிலதிபர்கள் யார், எதிர் கட்சிக்கு ஆதரவானவர் யார், என்பதை ஆய்வு செய்வர். மத்திய அரசில் ஆட்சி புரிபவர்களுக்கு ஆதரவானவர்களை அந்த லிஸ்டிலிருந்து தூக்கிவிடுவார்கள்.

முதல் லிஸ்டில் வடிகட்டப்பட்ட தொழிலதிபர்களை ஒரு புறம் வைப்பார்கள். பின்னர் அந்த மாநிலத்தின் பிரபல நடிகர்கள், நடிகைகள் யார் என்பதை பட்டியலிடுவார்கள். அவர்களில் யார் யார் மீது அரசால் புரசலாக கிசுகிசு செய்திகள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அவர்களை மட்டும் அந்த பட்டியலில் நிறுத்தி வைப்பார்கள். பின்னர் இந்த தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் தொலைபேசி இணைப்புகள் ஏதாவது ஒரு காரணம் காட்டி சட்டப்படியாக ஒட்டு கேட்கப்படும்.

இந்த ஒட்டு கேட்பில் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் தொலைபேசி உரையாடலில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவரும். அப்போது தான் இந்த வருமானவரி துறை ரெய்டு அவர்கள் மீது பாயும். அந்த ரெய்டு அவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தவே நடத்தப்படும். பின்னர் அவர்களிடம் வரப்போகும் தேர்தல் பற்றி பேசப்படும். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைத்தாள் அவர்கள் சேப். ஏதாவது அவர்கள் மக்கர் செய்தால் மீண்டும் அந்த ரெய்டு தொடரும், அவர்களுக்கு தொடர் சிக்கல் ஏற்படும். ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைத்தாள் என்ன என்று தானே கேட்கிறீர்கள்… அதாவது அவர்கள் தேர்தலுக்கு நிதி கொடுக்கப்பட வேண்டிய நிபந்தனை ஏற்படும் அல்லது அவர்களுக்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டும் என்பது தான் அந்த ஆட்சியாளர்கள் மறைமுகமாக வைக்கும் கோரிக்கைகள்.

இதில் சினிமா நடிகர்கள் நடிகைகள் என்ன என்றால், அதே தான் அவர்களுக்கும்…ரெய்டு! ஆனால் அது வருமானவரி துறை ரெய்டு மட்டுமல்ல, அதையும் தாண்டி!! அவர்களுடைய தொலைபேசி மற்றும் கைப்பேசிகளில் ஏதாவது ஏடாகுடமான உரையாடல்கள் நடந்துள்ளனவா என பார்க்கப்படும். குறிப்பாக நடிகைகளுடன் ஏதாவது பிரபல தொழிலதிபர்கள் அல்லது நடிகர்கள் எல்லை தாண்டி உரையாடியுள்ளார்களா? அந்தப்புரம் சந்திப்பு ஏதாவது நடந்துள்ளதா என ஆராய்ச்சி நடக்கும். அந்த ஆராய்ச்சியில் சிக்குபவர்கள் ஆளும் கட்சியினருக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.

இப்பிடி சிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் அந்த ஆளும் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு உதவி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அணைத்து நடிகர்களும், நடிகைகளும் இப்படி சிக்கியவர்கள் இல்லை. பல நடிகர்கள், நடிகைகள் அவர்கள் விரும்பியே பலதரப்பட்ட கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செயகிறார்கள்.

விஷயம் என்னவென்றால், சமீபத்தில் சில நடிகைகளுடைய தொலைபேசி மற்றும் கைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகைகள் இருவர் மற்றும் கொஞ்சம் பீல்டு அவுட் ஆகியுள்ள ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படிகிறது. இவர்களின் உதவியாளர்கள் தொலைபேசி மற்றும் கைபேசி உரையாடல்கள் மட்டும் ஒட்டு கேட்கப்படாமலா இருந்திருக்கும்.

இந்த ஒட்டு கேட்பில் சிக்க போவது நடிகையா அல்லது தொழிலதிபரா என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம்.

சரி இந்த தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு மத்திய அரசில் ஆள்பவர்கள் தான் செய்வார்களா என்ன, மாநில அரசில் ஆளுபவர்களும் செய்வார்கள்! அதுவும் குறிப்பாக அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது தான் அந்த மாநில அரசு நடத்தும்.

சரி சரி…. எனக்கு வந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துவிட்டேன். சிக்காமல் பார்த்துக்கொள்வது அவரவர் பொறுப்பு. பை பை.

1 Comment

Leave a Response