தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக உருவான டி.சிவாவின் பாதுகாப்பு அணி

2017 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமுழ திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. அவர்களுடைய பதவி காலத்தில், அந்த அணியில் அங்கம் வகித்த கே.ஈ.ஞானவேல்ராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் சிலர் வெளியேறினார். இருப்பினும் விஷால் தலைமையிலான அணி இரண்டு வருட பதவிக்காலம் முன்பே கலைக்கப்பட்டு, அந்த சங்கத்திற்கு தமிழக அரசால் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். பிறகு இந்த சிறப்பு அலுவலரால் ஒரு தற்காலிக கமிட்டி உருவாக்கப்பட்டு அதில் பாரதிராஜா, டி.சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ், டி.டி.ஜி.தியாகராஜன் மற்றும் சிலர் அதில் அங்கம் வகித்தனர்.

சில திணங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், அந்த தற்காலிக கமிட்டியை களைத்து, 2020 மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணி அதில் போட்டியிடும் அணி என பரபரப்பு ஆரம்பித்துவிட்டது.

இந்த தயரிப்பாளர் சங்க தேர்தலில் தயரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது. அந்த அணியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அந்த அணியினரால் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் பட்டியல் விவரம் கீழே வருமாறு:

T. சிவா – தலைவர்

K. முரளிதரன்(LMM) – பொருளாளர்

PL. தேனப்பன் – செயலாளர்

JSK. சதிஷ் குமார் – செயலாளர்

RK. சுரேஷ் – துணை தலைவர்

G. தனஞ்செயன் – துணை தலைவர்

செயற்குழு உறுப்பினர்கள்:

K. ராஜன்

ராதாரவி

K.S. ஸ்ரீனிவாசன்

சித்ரா லக்ஷ்மணன்

H. முரளி

SS. துரைராஜ்

K. விஜயகுமார்

RV. உதயகுமார்

மனோஜ் குமார்

S. நந்தகோபால்

மனோபாலா

பாபு கணேஷ்

பஞ்சு சுப்பு

M.S. முருகராஜ்

வினோத் குமார்

ரங்கநாதன்

பஞ்ச் பரத்

மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்.

டி.சிவா தலைமையிலான அணியை தவிர்த்து, கலைப்புலி எஸ்.தாணு அல்லது டி.டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணி, ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி மற்றும் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி உருவாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response