‘காஷ்மோரா’ திரைப்பட விமர்சனம்:

kashmora-2
பேய்கள், ஆவிகள் , ஏவல். இதர பயமுறுத்தும் விஷயங்களை வைத்து பணம் பார்க்கும், சாமர்த்தியசாலி ஹீரோ வேடத்தில் கார்த்தி தனது மயக்கும் செல்லமான குரலில் மந்திரங்களை கூறி நடித்துள்ள படம் தான் ‘காஷ்மோரா’. பிரபல டி வி சேனலில் வரும் நிகழ்ச்சிப்போல செமத்தியாக காட்சிகளை வைத்து கலாய்து கலக்கிய காட்சியை பாராட்டியே தீரவேண்டும். ஆவிகள், பேய்களை வைத்து தீசஸ் செய்ய முயற்சிக்கும் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா, சரியான திரைக்கதை அமைப்பு, காஷ்மோரோ அப்பா’வாக(சாமியாக) விவேக் அற்புதமான யதார்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். சில காட்சிகளில் வரும் பாட்டி ரிமோட் மூலம் சில தந்திரங்களை செய்து ஜமாய்க்கிறார்.

இப்படி கலகலப்பாக போகும் கதையில் பல நூற்றாண்டுகளாக ஆத்மா அமைதியடையாமல் உயிர் பெற காத்திருக்கும் மாவீரன் தளபதி வேடத்தில் இன்னொரு கார்த்தி சபாஷ். ரத்தினாவாக பேரழகி நயன்தாரா
அந்த மன்னராட்சி போர்ஷன் அனைத்தும் கண்கொள்ளா காட்சிகள். அந்த ஆத்மா வின் சூழ்ச்சியால் கோட்டைக்குள் சிக்கிய காஷ்மோரா குடும்பத்தினர் எப்படி தப்பி வருகின்றனர் என்பதே மீதிக்கதை….

மந்திரியிடம் அடித்த கோடிகளை படத்தின் முடிவு காட்சியில் ஸ்வாகா செய்யற லந்து போதும், விவேக்சார் வாங்க அசத்துங்க, சந்தோஷ் நாராயணின் இசை, ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, ராஜீவனின் அரங்கமைப்பு பிரபாதம். இயக்குனர் சொல்லவந்த கதையை சிறப்பாக வியந்துபார்க்கவைத்த திறமைக்கு பாராட்டுக்கள்..

ஸ்பெஷல் பாராட்டு.
வரலாற்று கற்பனை கதையில் பேரழகியாக ரத்தினமாதேவி. நடை, சண்டை காட்சிகளில் ஐயோடா, அழாட்சி
நடன அசைவுகளில் சொக்கவைக்கிற ஜாலம்..

காஷ்மோரா கார்த்தியின் தில்லாலங்கடியை உளவு பார்க்கும் ஸ்ரீதிவ்யாவின் கேரக்டர் அவருக்கு பொருத்தம்.

“ராஜ்நாய்க்” கேரக்டரில் வீரமான தளபதி, மற்றும் முதன்முறையாக அந்தப்புரத்தில் அழிச்சாட்டியம் செய்யும் அழகனாக..நம்ம கார்த் ” தீ” யான நடிப்பில் பட்டையை கிளப்பியதுக்கு கார்த்திக்கு பாராட்டுக்கள்.

“காஷ்மோரா”. “ஜோரா….ஜோரா” வசூலில் வலம் வருவான்..

விமர்சனம்: பூரி ஜெகன்

Leave a Response