வளர்ந்து வரும் இளம் நடிகைக்கு ரசிகர் மன்றம்

keerthi


ஒரு நடிகரோ, நடிகையோ வளர்ந்து வருகிறார்கள் என்றால் அவர்களை தொடர்பு கொண்டு ரசிகர் மன்றம் வைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிடுகிறார்கள்.

பெரும்பாலும் நடிகர்களுக்கு மட்டும் தான் ரசிகர் மன்றம் வைப்பார்கள். இது பற்றி நடிகைகளிடம் தொடர்பு கொண்டால் தேவையில்லை என மறுத்து விடுவார்கள்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் அணுகி ரசிகர் மன்றம் வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மன்றம் திறப்பது குறித்து சிறிதும் யோசிக்காத கீர்த்தி ரசிகர்கள் கேட்டதும் அதைப்பற்றி யோசிக்கத்தொடங்கியிருக்கிறாராம்.

ரசிகர் மன்றம் வைப்பது குறித்து கேட்ட பிறகுதான் தனது வளர்ச்சியைக் குறித்து எண்ணிப்பார்கிறாராம். தனக்கு கட-அவுட், பேனர் வைக்கபோவதாக ரசிகர்கள் சொன்னது இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறதாம்.

இன்னும் ரசிகர் மன்றம் வைப்பது குறித்து எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லயாம் கீர்த்தி.


 

Leave a Response