சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டிரைலர் எப்போது?

‘ரஜினி முருகன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ரெமோ’. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கிவருகிறார். ‘ரஜினி முருகன்’-க்கு பிறகு இதிலும் சிவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ’24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து சென்சாருக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
லேடி நர்ஸ் கெட்டப்பில் சிவா நடித்துள்ள இதன் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் & பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்தது. படத்தை வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது ‘ரெமோ’ டீம். இந்நிலையில், படத்தின் டிரைலரை வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது.

Leave a Response